கொரோனா தொற்று கட்டுப்பாடு அமல்: கோவை மாநகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டன


கொரோனா தொற்று கட்டுப்பாடு அமல்: கோவை மாநகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 21 April 2021 10:17 PM IST (Updated: 21 April 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தமிழக அரசு விதித்த கட் டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டன.

கோவை,

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மேலும் சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி கோவை வ.உ.சி. பூங்கா, முதியோர் நடைபயிற்சி பூங்கா, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த குள க்கரையோர பூங்காக்கள் நேற்று காலை முதல் மூடப்பட்டன.

கோவை நேருவிளையாட்டு மைதானம் அருகே உள்ள அரசு அருங்காட்சியகம் நேற்று திறந்து இருந்தது. ஆனால் பார்வையாளர்கள் யாரும் பார்வையிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அருங்காட்சியக அலுவலர் தெரிவித்தார். கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் தற்போது வரை மூடப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்.எஸ்.புரம் காந்திபார்க் கடந்த வாரம் மூடப்பட்டது. தற்போது தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து வ.உ.சி. பூங்கா, அதன் அருகே உள்ள முதியோர் நடைபயிற்சி பூங்கா, சிறுவர் விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை மூடப்பட்டு உள்ளது.

இதற்கான அறிவிப்பு பலகைகள் பூங்காக்கள் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டு உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளம் ஆகிய குளக்கரைகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து இந்த ஸ்மார்ட் சிட்டி பூங்காக்களும் மூடப்பட்டு உள்ளது. தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பூங்காக்கள் மூடப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனா காரணமாக பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர அச்சமடைந்து உள்ளனர்.


Next Story