கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கரூருக்கு 1,940 தடுப்பூசிகள் வந்தது


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கரூருக்கு 1,940 தடுப்பூசிகள் வந்தது
x
தினத்தந்தி 21 April 2021 10:51 PM IST (Updated: 21 April 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கரூருக்கு 1,940 தடுப்பூசிகள் வந்தது. இவைகள் 3 நாட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கரூர்,

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் சராசரி விகிதத்தின் அடிப்படையில், தற்போது வரப் பெற்றுள்ள கொரோனா தொற்று தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கரூர் மாவட்டத்திற்கு 7 நாட்களுக்கு 4,530 தடுப்பூசிகள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 3 நாட்களுக்கு தேவையான 1,940 தடுப்பூசிகள் நேற்று திருச்சியில் இருந்து கரூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

அடுத்த 4 நாட்களுக்கான 2,590 தடுப்பூசிகள் திருச்சி மாவட்டத்தில் உள்ள கொரோனா தடுப்பூசிக்கான சேமிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மருந்துகள் தீர்ந்த பிறகு அடுத்தடுத்த நாட்களுக்கான மருந்துகள் திருச்சியில் இருந்து கொண்டு வரப்படும்.

Next Story