கரூர் பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் கடைசி பஸ்கள் விபரம்
இரவு நேர ஊரடங்கால் கரூர் பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் கடைசி பஸ்கள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர்
கரூர் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் இரவு கடைசியாக புறப்படும் பஸ்கள் நேரம் குறித்து போக்குவரத்துக் கழகம் சார்பில் கரூர் பஸ் நிலையத்தில் தகவல் பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி புறநகர் பஸ்கள் திருப்பூர் இரவு 7.25 மணி, கோவை மாலை 5.20 மணி, ஈரோடு இரவு 7.17 மணி, திருச்சி இரவு 7.30 மணி. திருச்சி (பாளையம், தரகம்பட்டி) இரவு 7 மணி, திண்டுக்கல் (பள்ளப்பட்டி) மாலை 6.15 மணி, திண்டுக்கல் (ஈசநத்தம்) இரவு 7.10 மணி, பள்ளப்பட்டி இரவு 9.15 மணி.
நகர் பஸ்கள் வேலூர் (புஞ்சை புகளூர்) இரவு 7.45 மணி, வேலூர் (நேர்வழி) இரவு 9 மணி, வேலூர் (மூர்த்திபாளையம்) இரவு 7.35 மணி, தளவாபாளையம் (என்.புதூர்) இரவு 7.40 மணி, மோகனூர் (வாங்கல்) இரவு 9.10 மணி, மோகனூர் (ராமேஸ்வரப்பட்டி) இரவு 7.19 மணி, வாங்கல் (மின்னாம்பள்ளி) மாலை 6.55 மணி, திருமுக்கூடலூர் இரவு 9.10 மணி, கல்லுப்பாளையம், சோமூர் இரவு 9.20 மணி, சின்னதாராபுரம் இரவு 8.55 மணி, கூனம்பட்டி மாலை 6.40 மணி, காட்டுப்பு-த்தூர் (மாயனூர்) இரவு 9 மணி, போத்தராவுத்தன்பட்டி இரவு 8.50 மணி, பஞ்சப்பட்டி இரவு 7.30 மணி, வெள்ளக்கவுண்டம்பட்டி இரவு 7.30 மணி.
கோட்டாநத்தம் இரவு 8.40 மணி, பொசியம்பட்டி இரவு 8.30 மணி, சுண்டுகுழிப்பட்டி இரவு 8.20 மணி, நல்லமுத்துப்பாளையம் இரவு 7.25 மணி, மேலமாயனூர் இரவு 8.20 மணி, மாமரத்துப்பட்டி இரவு 7 மணி, பழைய ஜெயங்கொண்டம் (கோவக்குளம்) 7.15 மணி, பழைய ஜெயங்கொண்டம் (உப்பிடமங்கலம்) இரவு 7 மணி, பொம்மணத்துப்பட்டி இரவு 8.30 மணி, ஈசநத்தம் இரவு 8.20 மணி, வசந்தகதிர்பாளையம் (குவாரிசைட்) இரவு 7 மணி, ஆலமரத்துப்பட்டி மாலை 6.15 மணி, பாளையம் இரவு 7.32 மணி, வீரணம்பட்டி மாலை 6.25 மணி.
Related Tags :
Next Story