ஊரடங்கில் எவ்வித தளர்வுகளும் கிடையாது
ஊரடங்களில் எவ்வித தளர்வுகளும் கிடையாது என்று வால்பாறையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தாசில்தார் தெரிவித்தார்.
வால்பாறை
ஊரடங்களில் எவ்வித தளர்வுகளும் கிடையாது என்று வால்பாறையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தாசில்தார் தெரிவித்தார்.
தளர்வுகள் கிடையாது
கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் ஊரடங்கு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் வால்பாறை தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார தலைமை டாக்டர் பாபு லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாசில்தார் ராஜா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறும்போது, வால்பாறையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டை விட கூடுதலாக பரவி விட்டது. எனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றை வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள், எஸ்டேட் நிர்வாகங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஊரடங்கில் எவ்வித தளர்வுகளும் கிடையாது என்றார்.
முழு ஒத்துழைப்பு
டாக்டர் பாபு லட்சுமண் பேசுகையில் கடந்த ஆண்டு முழுவதும் சேர்த்து வால்பாறையில் 42 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை ஒரே நாளில் 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் இதுவரை கடந்த 15 நாட்களில் 26 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனவே கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி, நகராட்சி துப்புரவு அதிகாரி செல்வராஜ், வியாபாரிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், டூரிஸ்ட் கார், ஆட்டோ டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story