நாகை, வேதாரண்யத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகை, வேதாரண்யத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய சங்க துணைத்தலைவர் இடும்பன்சாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. பணிமனை தலைவர் பஞ்சநாதன், தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வார ஓய்வை பறிக்க கூடாது. போக்குவரத்து தொழிலாளர்களின் அரசு விடுப்பு விதிமுறைகளை மாற்ற கூடாது. சம்பளத்தை பறிக்கும் திட்டங்களை செயல்படுத்த கூடாது. தொழிற்சங்கத்தின் அறிவுரைகளை மீறக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
வேதாரண்யம்
அதேபோல் வேதாரண்யம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தலைவர் ஹரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் விடுமுறை எடுப்பதில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story