கரூர் மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கிறது அமைச்சர் பேட்டி


கரூர் மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கிறது அமைச்சர் பேட்டி
x

கரூர் மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கிறது என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்
அமைச்சர் பார்வையிட்டார்
தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் நேற்று கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கல்லூரிக்கு சென்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதை பார்வையிட்டார். 
பேட்டி
பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டிளித்தார் கூறுகையில், கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுடைய வாக்கு எந்திரங்கள் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தனி அறையில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
தேர்தல் கமிஷன் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தி.மு.க.வினர் தோல்வி பயத்தின் காரணமாக ஏதாவது ஒரு காரணத்தை கூறுகிறார்கள். துணை ராணுவப்படையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தவறு நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. கரூர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story