தொழிலாளியிடம் நகை-பணம் கொள்ளை


தொழிலாளியிடம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 22 April 2021 12:17 AM IST (Updated: 22 April 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் வந்த ரெயிலில் தொழிலாளியிடம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

நாகர்கோவில்:
நாகர்கோவில் வந்த ரெயிலில் தொழிலாளியிடம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
தொழிலாளி
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 39), தொழிலாளி. இவருடைய மகன் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க வினோத்குமார் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்தார். அந்த ரெயிலில் பயணம் செய்த 2 பேர் சென்னை தாம்பரத்தில் வினோத் குமாருக்கு டீ வாங்கி கொடுத்தனர். அதை குடித்த சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்தார். 
கொள்ளை
உடனே அவர்கள், வினோத்குமார் அணிந்து இருந்த ½ பவுன் மோதிரம், ரூ.27 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். அந்த ரெயில் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்துக்கு வந்ததும், வினோத் குமாருக்கு மயக்கம் தெளிந்தது. அவர் கண்விழித்து பார்த்த போது மோதிரம், பணம் மற்றும் செல்போனை காணவில்லை. அப்போது தான் டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை-பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது. உடனே அவர் நாகர்கோவில் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது, நாக்பூரைச் சேர்ந்த 2 பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story