ராமநாதபுரம்,
திருப்புல்லாணி அருகே நாடார் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அதே பகுதியைச் சேர்ந்த காசிம் மகன் ஜாகிர் உசேன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளி கொண்டிருந்தார்களாம். இந்த தகவல் அறிந்த அந்த பகுதி பொது மக்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்தபோது சுமார் 10 அடி ஆழத்தில் அனுமதியின்றி விற்பனைக்காக மணல் அள்ளி கொண்டு சென்றது தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த திருப்புல்லாணி போலீசார் அங்கு சென்ற போது 4 பேர் தப்பி சென்றுவிட்டனர்.இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு நின்றிருந்த பொக்லைன் எந்திரம், டிராக்டரை பறிமுதல் செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திணைக்குளம் காசிம் மகன் ஜாகிர்உசேன், பஞ்சம்தாங்கி பாண்டி மகன் மூர்த்தி, வைரவனேந்தல் டிராக்டர் டிரைவர் ஹரிஷ், மதுரையை சேர்ந்த பொக்லைன் டிரைவர் ராமர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.