திருச்சியில் இருந்து கொழும்புக்கு நேரடி வாராந்திர விமான சேவை;மே 2-ந்தேதி தொடங்குகிறது
திருச்சியில் இருந்து கொழும்புக்கு நேரடி வாராந்திர விமான சேவை அடுத்த மாதம்(மே) 2-ந்தேதி தொடங்குகிறது.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகரம் கொழும்புக்கு கடந்த ஆண்டு மார்ச் 25-ந்தேதி வரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கி வந்தது. காலை மற்றும் மாலை என தினமும் 2 விமான சேவைகள் இதன் மூலம் பயணிகளுக்கு கிடைத்து வந்தன. இந்தநிலையில் ஊரடங்கு காரணமாக பன்னாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. ஆனால் இதுவரை கொழும்புக்கு விமானங்கள்.
இயக்கப்படவில்லை.இ்ந்தநிலையில் மீண்டும் அடுத்த மாதம்(மே) 2-ந்தேதி முதல் கொழும்பு-திருச்சி விமான சேவை தொடங்கப்பட உள்ளன. அதன்படி, வாரத்தில் ஒரு நாள் மட்டும் இயக்கப்பட உள்ள இந்த விமானம் கொழும்புவில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு காலை 10 மணிக்கு வந்தடையும். மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு காலை 11 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
Related Tags :
Next Story