குடிநீர் முறையாக வழங்காததால் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் முறையாக வழங்காததால் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவெறும்பூர்,
திருச்சி மாநகராட்சி 69-வது வார்டுக்கு உட்பட்ட காட்டூர் அருந்ததியர் தெரு பகுதியில் சுமார் 3 மாதத்துக்கும் மேலாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி புகார் தெரிவித்தும் மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். உடனே திருவெறும்பூர் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினார்கள். அப்போது, அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், குடிநீர் வழங்க நடவடிக்கை எப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story