கொத்தடிமைகள் 7 பேர் மீட்பு


கொத்தடிமைகள் 7 பேர் மீட்பு
x
தினத்தந்தி 22 April 2021 1:09 AM IST (Updated: 22 April 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

கொத்தடிமைகள் 7 பேர் மீட்கப்பட்டனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே பகட்டுவான்பட்டி கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த திருவண்ணமாலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது28)-ஜெயா தம்பதி மற்றும் எல்லப்பன் (31) அவரது மனைவி உமா, அவர்களது குழந்தைகள் 3 பேர் ஆகிய 7 பேரை அதிகாரிகள் மீட்டனர். இதில் சுரேஷ், எல்லப்பன் ஆகியோர் தலா ரூ.30 ஆயிரம் முன் பணம் வாங்கி கொண்டு இங்கு வந்து வேலை பார்த்ததும் வேலைக்கு கூலி வழங்காமல் கொத்தடிமைகளாக கொடுமைப்படுத்தி நடத்தி வந்ததும் தெரிந்தது.  அவர்களை கொத்தடிமைகளாக வேலை வாங்கிய மேஸ்திரி மற்றும் தோட்டத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Next Story