8 மாத குழந்தையை ெகான்ற டிரைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


8 மாத குழந்தையை ெகான்ற டிரைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

திருக்குறுங்குடியில் 8 மாத குழந்தையை கொன்ற டிரைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஏர்வாடி:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் சுடலை ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் சிவசங்கரன் (வயது 28). கார் டிரைவர்.  இவர் திருக்குறுங்குடி தெற்கு மகிழடியை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ரசூல்ராஜ் (58) என்பவரின் மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பிய சிவசங்கரன் அவரது தந்தை ரசூல்ராஜிடம் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் அவர் பெண் கொடுக்க மறுத்து விட்டார். 

இதைத்தொடர்ந்து ரசூல்ராஜ் குடும்பத்தினர் மீது சிவசங்கரனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் சிவசங்கரன் கடந்த மாதம் (மார்ச்) 20-ந்தேதி அதிகாலையில் ரசூல்ராஜின் வீட்டுக்கு சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர், ரசூல்ராஜ், அவருடைய மனைவி எப்சிபாய் (52). அவர்களது மூத்த மகள் ஏஞ்சல் நலதன்-ஆனந்த் செர்லின் தம்பதியின் 8 மாத பெண் குழந்தையான அக்சயா குயின்சி ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் குழந்தை அக்சயா குயின்சி பரிதாபமாக இறந்தது. ரசூல்ராஜ், எப்சிபாய்க்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதுதொடர்பாக திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவசங்கரனை கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிவசங்கரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று சிவசங்கரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை பாளையங்கோட்டை மத்திய சிறையில் திருக்குறுங்குடி போலீசார் சமர்ப்பித்தனர். 




Next Story