இரவு நேர ஊடங்கால் 10 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன
இரவு நேர ஊடங்கால் 10 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
இரவு நேர ஊடங்கால் 10 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
இரவு நேர ஊரடங்கு
கொரோனா தொற்றின் 2-வது அலையானது மிகவும் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்படும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.
கொடுமுடி
இதேபோல் கொடுமுடியில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் வர்த்தக நிறுவனங்கள், சிறு வியாபார கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் பஸ், கார், லாரி, வேன் போன்ற எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. ரோடுகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன. கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே சோதனையிலும் ஈடுபட்டனர்.
சிவகிரி
சிவகிரி மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணி முதல் கடைகளை அடைக்க தொடங்கினர். சில கடைகள் மட்டும் பூட்டாமல் இருந்தது. உடனே போலீசார் அங்கு சென்று, கடைகளை அடைக்க கூறினார்கள். அதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
இதனால் ரோடு மற்றும் தெருக்களில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. வழக்கமாக மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் சிவகிரி கடைவீதி, புதிய பஸ் நிலையம், தெற்கு பாளையம் பகுதிகள் வெறிச்சோடி கிடந்தது.
Related Tags :
Next Story