மாவட்ட செய்திகள்

சென்னிமலை அருகேகீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் தொடங்கியது + "||" + lvb canel

சென்னிமலை அருகேகீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் தொடங்கியது

சென்னிமலை அருகேகீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் தொடங்கியது
சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கியது.
சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கியது.
விவசாயிகள் கோரிக்கை
ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயை விரிவாக்குதல், சீரமைப்பு போன்ற பணிகளை செய்ய தமிழக அரசு ரூ.709 கோடியே 60 லட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றினால் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர் செறிவூட்டுவது நின்று விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் குடிநீர் பிரச்சினையும் ஏற்படும் என கீழ்பவானி பாசன பகுதியின் சில விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அதேசமயம் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே கடைமடை பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் சென்றடையும். மேலும் பழுதடைந்த பாலங்கள், கல்வெட்டுகள் மற்றும் சிதிலமடைந்த மதகுகள் சீரமைப்பு செய்ய முடியும். எனவே இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மற்றொரு தரப்பு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
எந்திரங்கள் நிறுவும் பணிகள்
இதைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்காலில் நவீனப்படுத்துவதற்கான முதல் கட்ட பணிகள் நேற்று தொடங்கியது. சென்னிமலை அருகே அறச்சலூர் ரோட்டில் உள்ள தலவுமலை என்ற இடத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் சிமெண்ட் பலகைகள் தயார் செய்வதற்கான எந்திரங்களை நிறுவுவதற்கான பணிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது.
அப்போது கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் அங்கு வந்தனர். அவர்கள், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை எந்த பணியையும் செய்யக்கூடாது என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டது.
எதிர்ப்பு
இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், பெருந்துறை கூடுதல் தாசில்தார் அறிவழகன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன் (சென்னிமலை), சண்முகசுந்தரம் (அறச்சலூர்), பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி பொறியாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அங்கு சென்று எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மேலும் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ.வுக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் விவசாயிகளிடம் கூறும்போது ‘இன்று (வியாழக்கிழமை) ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் நீங்களும் கலந்து கொள்ளலாம் என்று ஆர்.டி.ஓ. அழைப்பு விடுத்துள்ளார்’ என்றனர். இதனை ஏற்று கொண்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பாதிக்காத வகையில்...
இதுகுறித்து பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் அருள் நிருபர்களிடம் கூறுகையில், ‘வருகிற 30-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்படுகிறது. அதன்பிறகு சிதிலமடைந்த மதகுகள், வடிகால்கள் அனைத்தும் சீரமைப்பதுடன் பாலங்களும் விரிவுப்படுத்தும் பணியை தொடங்க உள்ளோம். இது கான்கிரீட் லைனிங் திட்டம் அல்ல. இந்த திட்டத்தால் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் எந்த வகையிலும் பாதிக்காது. வருகிற ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் இந்த பணிகளை செய்து முடிக்க உள்ளோம்.
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் கீழ்பவானி வாய்க்கால் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் இந்த திட்டத்தை விரைவாக செய்து முடிக்க உதவ வேண்டும். அப்போதுதான் எந்த விவசாயிகளும் பாதிக்காத வகையில் வருகிற ஆகஸ்டு மாதம் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வசதியாக இருக்கும்’ என்றார்.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. சைபுதீன் தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பவானிசாகர் அணையில் இருந்து, பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக, கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.
2. கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம்
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
3. கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு; 5 கிராமங்களில் வெள்ளம் புகுந்தது
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை உடைந்தது. இதனால் 5 கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. 100 ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கியது.
4. கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்டு மாதம் தண்ணீர் திறக்கப்படுமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு
கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்டு மாதம் தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
5. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.