கீழே கிடந்த ரூ.58 ஆயிரத்தை எடுத்து போலீசில் ஒப்படைத்த பெண்


கீழே கிடந்த ரூ.58 ஆயிரத்தை எடுத்து போலீசில் ஒப்படைத்த பெண்
x
தினத்தந்தி 22 April 2021 2:28 AM IST (Updated: 22 April 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவியில் பெண் ஒருவர் கீழே கிடந்த ரூ.58 ஆயிரத்தை எடுத்து போலீசில் ஒப்படைத்தார்.

முக்கூடல்:
பாப்பாக்குடி வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த கணபதி என்பவரின் மகள் மாரியம்மாள் (வயது 19). இவர் தெருக்களில் கிடக்கும் பாட்டில், பழைய பேப்பர்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார். அவர் நேற்று சேரன்மாதேவி மெயின் ரோட்டில் வந்தபோது, அங்கு மணிபர்ஸ் ஒன்று கீழே கிடந்தது. அதை எடுத்து திறந்து பார்த்தபோது, ரூ.58 ஆயிரத்து 210 மற்றும் ஒரு செல்போன், 2 ஆதார் கார்டுகள் இருந்தன. உடனே மாரியம்மாள் அந்த மணிபர்சை முக்கூடல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் விசாரணையில், அந்த மணிபர்ஸ் சேரன்மாதேவி காயிதே மில்லத் தெருவை சேர்ந்த முகம்மது ஹனிபா என்பவரின் மனைவி ஜாஸ்மீன் நிஷாவுக்கு உரியது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது கணவருடன் முக்கூடல் போலீஸ் நிலையத்து வந்து பணம், செல்போன், ஆதார் கார்டுகளுடன் மணிபர்சை பெற்றுக் கொண்டார். கீழே கிடந்த மணிபர்சை எடுத்து போலீசில் ஒப்படைத்த மாரியம்மாளின் நேர்மையை பாராட்டி அவருக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் குத்துவிளக்கு பரிசாக வழங்கினார்.



Next Story