விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று போக்குவரத்து போலீசார் சார்பில் தஞ்சை- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஹெல்மெட் அணியாதவர்கள், கனரக வாகனங்களில் அதிக சரக்கு ஏற்றி வந்தவர்கள், அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியவர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் என சாலை விதிமுறைகளை மீறியவர்களுக்கு மொத்தம் ரூ.30 ஆயிரத்து 300 அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த வாகன சோதனையில் அரியலூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், செல்வராஜ் உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story