நாக கன்னியம்மன் கோவிலில் ராமநவமி விழா


நாக கன்னியம்மன் கோவிலில் ராமநவமி விழா
x
தினத்தந்தி 22 April 2021 2:40 AM IST (Updated: 22 April 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

நாக கன்னியம்மன் கோவிலில் ராமநவமி விழா நடைபெற்றது.

பெரம்பலூர்:
பெரம்பலூரில் மதரசா சாலையில் வடக்கு தெப்பக்குளம் அருகே உள்ள அம்ச நாக கன்னியம்மன், ஜெய் அனுமான் கோவிலில் ராமஜென்ம தினத்தையொட்டி ராமநவமி விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் அனுமன் சன்னதியில் சிறப்பு ஹோமமும், தீர்த்த மகா அபிஷேகமும், பழ வகைகள், பானகம், நீர்மோர், வடை பாயசம் தயிர் படையலுடன் நிவேதனமும் மற்றும் தீபாராதனையும் நடந்தது. ஹோமம் மற்றும் பூஜைகளை கோவில் பூசாரி ராஜ்குமார் நடத்தினார். இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து திரளாக கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

Next Story