மணல் கடத்தல்; 2 சரக்கு ஆட்டோக்கள்- லாரி பறிமுதல்


மணல் கடத்தல்; 2 சரக்கு ஆட்டோக்கள்- லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 22 April 2021 2:40 AM IST (Updated: 22 April 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தல்; 2 சரக்கு ஆட்டோக்கள்- லாரி பறிமுதல்

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் காசாங்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காசாங்கோட்டை பெரிய ஏரி அருகே ஸ்ரீபுரந்தான் பகுதியில் இருந்து வந்த 2 சரக்கு ஆட்டோக்களை மறித்து சோதனை செய்ய முயன்றனர். அப்போது சரக்கு ஆட்டோக்களை ஓட்டி வந்த டிரைவர்கள், சாலையின் ஓரமாக சரக்கு ஆட்டோக்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சரக்கு ஆட்டோக்களில் போலீசார் சோதனை செய்தபோது அதில் மணல் ஏற்றப்பட்டிருந்தது. இது குறித்து விசாரித்தபோது, அறங்கோட்டை கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து காசாங்கோட்டை பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து 2 சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற டிரைவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதேபோல் திருமானூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் தலைமையிலான போலீசார் காரைப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவர் கீழப்பழுவூரை சேர்ந்த ராமராஜின் மகன் சந்தோஷ்குமாரை(24) போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story