சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு37 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா பாதிப்பு37 ஆயிரத்தை தாண்டியது
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை தாண்டியது. மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 383 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 401 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 204 பேர், ஓமலூரில் 28 பேர், ஆத்தூரில் 22 பேர், காடையாம்பட்டியில் 18 பேர், சேலம் ஒன்றியத்தில் 17 பேர், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 14 பேர், மகுடஞ்சாவடி, நங்கவள்ளியில் தலா 10 பேர், தாரமங்கலத்தில் 9 பேர், மேச்சேரி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், எடப்பாடியில் 7 பேர், சங்ககிரியில் 6 பேர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், மேட்டூரில் 4 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 3 பேர், கொளத்தூரில் 2 பேர், கொங்கணாபுரம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
37 ஆயிரத்தை தாண்டியது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 72 ஆக அதிகரித்து உள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 146 பேர் குணமடைந்து விட்டதால் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். 2,276 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 55 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 54 வயதுடைய ஆண் மற்றும் 78 வயதுடைய முதியவர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
Related Tags :
Next Story