கொரோனாவால் வியாபாரத்துக்கு தடை சென்னையில் நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


கொரோனாவால் வியாபாரத்துக்கு தடை சென்னையில் நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 April 2021 5:37 AM IST (Updated: 22 April 2021 5:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அனைத்து திருவிழாக்கால வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை, 

கொரோனா பரவல் காரணமாக சிறு கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு அனைத்து திருவிழாக்கால வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா பரவல் இருந்தபோதும் தேர்தல் பிரசாரத்துக்கும், மதுக்கடைகளுக்கும் தடை விதிக்காமல், திருவிழாக்காலங்களில் சாலையோர சிறுகடைகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாநில இணை செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்ட பொருளாளர் வி.குப்புசாமி, சங்கத்தின் கவுரவத் தலைவர் ஆர்.ஜெயராமன், தலைவர் ஏ.கே.ஷாஜகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Next Story