மாவட்ட செய்திகள்

கேளம்பாக்கத்தில் காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீஸ் நிலையத்தில் கரம் பிடித்த பெண் + "||" + The girl who fell in love in Kalambakkam and refused to get married at the police station

கேளம்பாக்கத்தில் காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீஸ் நிலையத்தில் கரம் பிடித்த பெண்

கேளம்பாக்கத்தில் காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீஸ் நிலையத்தில் கரம் பிடித்த பெண்
கேளம்பாக்கத்தில் காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீஸ் நிலையத்தில் பெண் கரம் பிடித்தார்.
மாமல்லபுரம், 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த புதுவேட்டைகுடி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 32). பி.டெக் படித்துள்ள அவர் பழைய மாமல்லபுரம் சாலை, கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தன்னுடைய நண்பர்களுடன் தங்கி அங்குள்ள மாத்திரை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் விற்பனை பிரிவு அலுவலராக வேலை பார்த்து வந்தார்.

இதே நிறுவனத்தில் கேளம்பாக்கம் சாத்தாங்குப்பம் பகுதியை சேர்ந்த அந்தோனிசலேரி (31) என்ற பெண்ணும் வேலை செய்து வந்தார்.

ஒரே நிறுவனத்தில் இருவரும் வேலை செய்து வந்ததால் தினமும் சந்திக்கும் சூழல் ஏற்பட்டு நண்பர்களாக பழகினர். பின்னர் அது காதலாக மாறியது.

கடந்த 3½ ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் பல்வேறு இடங்களில் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். நிறுவன விடுமுறை நாட்களில் கணவன், மனைவி போல நெருக்கமாக ஊர் சுற்றி வந்தனர்.

வேறு ஒரு பெண்ணுடன் திருமணம்

கோபாலகிருஷ்ணன் அந்தோனிசலேரி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாகவும், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அவரது குடும்பத்தினரிடமும் அன்பாக பழகியுள்ளார்.

இந்த நிலையில் தான் ஊருக்கு சென்றுவிட்டு வருவதாக அந்த பெண்ணிடம் கூறிவிட்டு சென்ற கோபாலகிருஷ்ணன் பல மாதங்கள் ஆகியும் கேளம்பாக்கம் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்தோனிசலேரி அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மறுபடியும் அவர் தொடர்பு கொண்ட போது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்ற தகவலே திரும்ப, திரும்ப வந்தது.

கோபாலகிருஷ்ணனுக்கு கள்ளக்குறிச்சியை ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு வருகிற 25-ந்தேதி திருமணம் செய்ய இிருந்த தகவல் அந்தோனிசலேத்துக்கு தெரிய வந்தது.

போலீசில் புகார்

ஆசை வார்த்தை கூறி தன்னுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்தோனிசலேத் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அமுதாவிடம் புகார் செய்தார். கோபாலகிருஷ்ணன் இருக்கும் இடத்தை செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து மாமல்லபுரம் மகளிர் போலீசார் கண்டுபிடித்தனர்.

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவனம் உத்தரவின்பேரில் மப்டி உடையில் கள்ளக்குறிச்சி சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் தலைமறைவாக இருந்த கோபாலகிருஷ்ணனை கைது செய்து மாமல்லபுரம் அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் தான் ஏமாற்றிய இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக மனம் மாறி ஒப்பு கொண்டார்.

போலீஸ் நிலையத்தில் திருமணம்

இருவரது பெற்றோர், மகளிர் போலீசார் முன்னிலையில் கோபாலகிருஷ்ணன், அந்தோனி சலேரி இருவரும் போலீஸ் நிலையத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட ஜோடியை மகளிர் போலீசார் வாழ்த்தி அனுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. முகநூல் நட்பால் காதலித்து 2 பெண்களை மணந்த வாலிபர் முதல் மனைவியை தாக்கியதால் கைதானார்
முகநூல் நட்பில் காதலித்து 2 பெண்களை மணந்த வாலிபர், முதல் மனைவியை தாக்கியதால் கைதானார்.
2. காதலித்து திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய என்ஜினீயர் கைது - சென்னையில் பரபரப்பு சம்பவம்
சென்னையில் கல்லூரி மாணவிகளை காதலித்து, திருமண ஆசைகாட்டி அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய என்ஜினீயர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.