திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட 10 தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு


திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட 10 தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
x

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட 10 தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர், 

தமிழக முழுவதும் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந்தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பத்திரமாக அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் போன்ற 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு ஊராட்சியில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் சீல் வைத்து 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

கலெக்டர் ஆய்வு

இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தின் இருப்பு அறைகளின் சீல் செய்து வைக்கப்பட்டுள்ளதை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் பெருமாள்பட்டு தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு நேற்று திடீரென மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா பாவையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு அறைகள் சீல் செய்து வைக்கப்பட்டு பாதுகாப்புடன் உள்ளதா? என்பதை அனைத்து கட்சி வேட்பாளர்கள், அவர்களது முகவர்களுடன் நேரில் சென்று அவர் உறுதி செய்தார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story