கோடை வெயிலை சமாளிக்க இப்படியும் ஒரு வழி சோலார் பேனல் மூலம் சுழலும் விசிறியுடன் கூடிய நவீன தொப்பி
கோடை வெயிலை சமாளிக்க இப்படியும் ஒரு வழி சோலார் பேனல் மூலம் சுழலும் விசிறியுடன் கூடிய நவீன தொப்பி நகரில் வலம் வந்து அசர வைத்த முதியவர்.
புதுச்சேரி,
புதுவையில் வெயில் கொளுத்தி வருகிறது. காலை 10 மணிக்கு மேல் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயிலின் உக்கிரம் இருந்து வருகிறது. கோடை வெயிலின் கொடுமையை சமாளிக்க பழச்சாறு, சர்பத், ஐஸ் மோர் என நீராகாரங்களை குடித்து பலரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர்.
இதுதவிர மண் குவித்து அதில் வைக்கப்பட்ட மண்பானையில் நிரப்பிய தண்ணீரை குடித்தும், பனை ஓலை விசிறியை பயன்படுத்தியும் வெட்கையை சமாளித்து வருகின்றனர்.
இந்த வகையில் முதியவர் ஒருவர் புதுவிதமான நவீன தொப்பி அணிந்தபடி நகரை வலம் வந்து ஆச்சரியப்படுத்தினார். நேற்று அரவிந்தர் ஆசிரம பகுதியில் நடமாடிய அவர் அணிந்திருந்த தொப்பி பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்தது.
தலையில் அவர் வைத்து இருந்த சோலார் பேனல் வெயிலில் பளபளத்ததுதான் அதற்கு காரணம். அதன் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் அந்த தொப்பியில் பொருத்தப்பட்டுள்ள மின் விசிறியுடன் இணைக்கப்பட்டு இருந்தது.
தொப்பியின் முன்பக்கத்தில் உள்ள அந்த மின்விசிறி சுழன்று முகத்துக்கு நேேர காற்றாக வீசியது அதை காண்பவர்களை அசர வைத்தது.
சீனாவின் தயாரிப்பான அந்த தொப்பியை அணிந்தபடி வெயிலைப்பற்றி கவலைப்படாமல் அந்த முதியவர் அனைவருக்கும் குட்பை சொல்லியபடியே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
Related Tags :
Next Story