ஸ்ரீவைகுண்டத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்


ஸ்ரீவைகுண்டத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 22 April 2021 4:48 PM IST (Updated: 22 April 2021 4:48 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் (பொ) மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலருமான பரிமளா தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஸ்ரீவைகுண்டம் தாசில்தாருமான கோபாலகிருஷ்ணன், சாத்தான்குளம் தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மே 2-ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களும், முகவர்களும் கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கொரானா பரிசோதனை முடிவிற்கான சான்றிதழை கொண்டு வந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் திருச்செந்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் லெனின், தேர்தல் துணை தாசில்தார் தங்கையா, அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் கருப்பசாமி, தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் ஆறுமுகப் பெருமாள், அ.ம.மு.க. மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வக்கீல் சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் சிவராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story