வடமாநில தொழிலாளர்கள் சிறைபிடிப்பு
தாராபுரம் நகராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் அழைத்து வந்த வடமாநில தொழிலாளர்களை, தாராபுரம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம்
தாராபுரம் நகராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் அழைத்து வந்த வடமாநில தொழிலாளர்களை, தாராபுரம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் நகராட்சி
தாராபுரம் நகராட்சியில் 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கடந்த 10 ஆண்டுகாலமாக பணியாற்றி வந்தனர். அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டது. அந்த சம்பளத்தில் அரசு விதிகளின்படி பிடித்தம் செய்தனர். ஆனால் அந்த பணத்தை இதுவரை தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. பிடித்தம் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ரசீதும் வழங்கப்படவில்லை.
இதனை தட்டிக்கேட்ட துப்புரவு தொழிலாளர்களை அதிக சம்பளம் கேட்பதாக கூறி நகராட்சி நிர்வாகம் அனைவரையும் வேலையிலிருந்து நிறுத்தியுள்ளது. இது குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர். ஆனாலும் நகராட்சி நிர்வாகம் துப்புரவு பணியாளர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருந்து வந்தது.
சிறை பிடிப்பு
இந்த நிலையில் நேற்று திடீரென 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை தாராபுரம் நகராட்சி பகுதியில் துப்புரவு பணி மேற்கொள்ள அழைத்து வந்தது. இந்த விவரம் ஏற்கனவே தாராபுரம் நகராட்சியில் துப்புரவுப்பணியாளர்களாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து வடமாநில தொழிலாளர்களை அங்குள்ள தனியார் மண்டபத்தில் வைத்து அடைத்து வைத்து தாராபுரம் துப்புரவு பணியாளர்கள் சிறை பிடித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில் தாராபுரம் நகராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்ள எங்களை நகராட்சி நிர்வாகம் அழைத்து வந்தது. இங்கு ஏற்கனவே பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு சம்பள பாக்கி தரவில்லை என தெரிய வந்துள்ளது. இதனால் இங்குள்ள துப்புரவு பணியாளர்களை பயன்படுத்தாமல், எங்களுக்கு வேலை தருவதாக கூறுவதை ஏற்க முடியவில்லை. இதனால் நாங்கள் அனைவரும் சொந்த ஊருக்கு செல்கிறோம் என்றனர். இதனை அறிந்த துப்புரவு பணியாளர்கள் வடமாநில தொழிலாளர்களை விடுவித்தனர்.
பணியில் அமர்த்த வேண்டும்
இதுகுறித்து துப்புரவு பணியாளர் கூறும்போது நாங்கள் நகராட்சியை நம்பி பிழைப்பு நடத்தி வருகிறோம். ஆனால் நகராட்சி நிர்வாகம் பல்வேறு காரணங்களை கூறி எங்களை புறக்கணித்து வருகின்றனர். முறையாக எங்களுக்கு சேரவேண்டிய பிடித்தம் செய்த தொகையை வழங்கி எங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றனர்.
---------------
தாராபுரம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்களை சிறைபிடித்த போது எடுத்த படம்
---
தாராபுரம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்ற வந்த வட மாநிலத் தொழிலாளர்கள்.
Related Tags :
Next Story