100 கொரோனா படுக்கைகள் தயார்
சிக்கண்ணா அரசு கல்லூரியில் 100 கொரோனா படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
திருப்பூர்
சிக்கண்ணா அரசு கல்லூரியில் 100 கொரோனா படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த அளவிற்கு பாதிப்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றின் பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடுமலை, அவினாசி, திருப்பூர் காலேஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரிகள் மற்றும் மண்டபங்கள் கொரோனா வார்டாக மாற்றப்பட்டு, அங்கு படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
100 படுக்கைகள்
இந்நிலையில் திருப்பூர் மாநகர பகுதியில் பாதிப்பு அதிகமாக உள்ளதால் கூடுதலாக படுக்கைகள் அமைக்க சுகாதாரத்துறை முடிவு செய்தது. அதன்படி திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் கொரோனா படுக்கைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு படுக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
சிக்கண்ணா கல்லூரியில் ஏற்கனவே 50 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு இடவசதி இருப்பதால் மேலும் 50 கொரோனா படுக்கைகள் என மொத்தம் 100 கொரோனா படுக்கைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் தயாராக இருக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story