ஒரே நாளில் ரூ.1½ லட்சம் அபராதம் வசூல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் ரூ.1½ லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம்,பிப்
ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தீவிர வாகன சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. அதன்படி அதிக வேகத்தில் சென்றதாக 10 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 28 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்சென்றதாக 6 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 530 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 145 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 266 பேர் மீதும் என மொத்தம் ஆயிரத்து 988 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story