வாக்கு எண்ணிக்கை ஆலோசனை கூட்டத்தில் சுயேச்சை வேட்பாளரால் ஏற்பட்ட பரபரப்பு
வாக்கு எண்ணிக்கை ஆலோசனை கூட்டத்தில் சுயேச்சை வேட்பாளரால் ஏற்பட்ட பரபரப்பு ஏற்பட்டது
உசிலம்பட்டி
உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்ைக தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து சான்று வழங்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் முகவர்களின் எண்ணிக்கையை குறைத்து கொள்ள வேண்டும் வலியுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சுயேட்சை வேட்பாளர் தனசேகரன், தேர்தலின் போது அதிகப்படியாக பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு அ.தி.மு.க. வினர் எதிர்ப்பு தெரிவித்து தனசேகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றி இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story