பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் கே.வி.ஆர். நகரில் 20 வயது நபருக்கும், வள்ளியம்மாள் லே-அவுட்டில் 74 வயது முதியவருக்கும், ராமகிருஷ்ணாபுரம் வீதியில் 64 வயது மூதாட்டிக்கும், ராம் நகர் லே-அவுட்டில் 40 வயது பெண்ணுக்கும், குமரன் நகரில் 52 வயது பெண்ணுக்கும், வெங்கட்ரமணன் வீதியில் 60 வயது முதியவருக்கும், 62 வயது மூதாட்டிக்கும், ஆறுமுகம் நகரில் 61 வயது முதியவருக்கும், ஜோதி நகரில் 53 வயது பெண்ணுக்கும், பல்லடம் ரோட்டில் 51 வயது பெண்ணுக்கும்,
செங்குட்டுவன் வீதியில் 53 வயது நபருக்கும், ஜோதி நகர் டி காலனியில் 60 வயது மூதாட்டிக்கும், கிருஷ்ணசாமி வீதியில் 61 வயது நபருக்கும், அழகப்பா லே-அவுட்டில் 24 வயது பெண்ணுக்கும், டி.கோட்டாம்பட்டியில் 36 வயது பெண்ணுக்கும், வெங்கடேசா காலனியில் 32 நபருக்கும், மரப்பேட்டை வீதியில் 42 வயது நபருக்கும், வடுகபாளையத்தில் 25 வயது நபருக்கும்,
அன்னபூரணியம்மாள் லே-அவுட்டில் 42 வயது நபருக்கும், ஆர்.ஆர். தியேட்டர் ரோட்டில் 35 வயது நபருக்கும், நேதாஜி ரோட்டில் 39 வயது பெண்ணுக்கும், உடுமலை ரோட்டில் 50 வயது நபருக்கும், 41 வயது பெண்ணுக்கும் சேர்த்து மொத்தம் 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் சின்னாம்பாளையத்தில் 2 பேருக்கும், சூளேஸ்வரன்பட்டியில் 4 பேருக்கும், மாக்கினாம்பட்டியில் 4 பேருக்கும், நாட்டுக்கல்பாளையம், பக்கோதிபாளையம், ஜமீன்ஊத்துக்குளி, வக்கம்பாளையம், சீனிவாசபுரத்தில் தலா ஒருவருக்கும் சேர்த்து 15 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
வடக்கு ஒன்றியத்தில் திப்பம்பட்டி, நரசிங்காபுரம், கொல்லப்பட்டி, அனுப்பர்பாளையத்தில் தலா ஒருவருக்கும் சேர்த்து 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி பகுதிகளில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து தொற்று பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story