அரசியல் கட்சியினருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அரசியல் கட்சியினருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்று பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
பழனி:
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2-ந்தேதி நடைபெற உள்ளது.
இதையடுத்து அங்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை தேர்தல் அலுவலர்கள், போலீசார் செய்து வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் அரசியல் கட்சியினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சப்-கலெக்டர் ஆனந்தி தலைமை தாங்கினார்.
இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின்போது, வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அரசியல் கட்சியினர் அரசின் கொரோனா விதிகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இதேபோல் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story