நீடாமங்கலம் வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர்
நீடாமங்கலம் வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
நீடாமங்கலம்:-
நீடாமங்கலம் வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
கொரோனா
கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாரத்தில் ஏற்கனவே பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டு, அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தடுப்பூசி
பாதிக்கப்பட்ட நபரின் குடியிருப்பு பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலெட்சுமி, மருத்துவர் உதயா, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள், சுகாதார நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
நீடாமங்கலம் வட்டாரத்தில் கோவில்வெண்ணி, ராயபுரம், வடுவூர், பேரையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு நேற்று கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் 50 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையம்
கோவில்வெண்ணி அரசுஆரம்ப சுகாதாரநிலையத்தில் நாள் தோறும் காலை 10 மணிமுதல் மதியம் 3 மணிவரை கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், பொதுமக்கள் இந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story