மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மேட்டுமகாதானபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
லாலாபேட்டை
லாலாபேட்டை அருகே மேட்டு மகாதானபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கல்யாண விநாயகர், முருகன், பகவதி அம்மன் ஆகிய பரிவார தெய்வங்களும் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story