கரூர் மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்குகொரோனா


கரூர் மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்குகொரோனா
x
தினத்தந்தி 22 April 2021 11:34 PM IST (Updated: 22 April 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் புதிதாக 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர்
58 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவின் 2-வது அலையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வெங்கமேட்டை சேர்ந்த 45 வயது பெண், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த 55 வயது பெண், 31 வயது வாலிபர், அரவக்குறிச்சியை சேர்ந்த 52 வயது பெண், காந்திகிராமத்தை சேர்ந்த 82 வயது மூதாட்டி, மணவாசியை சேர்ந்த 45 வயது ஆண், தாந்தோணிமலையை சேர்ந்த 66 வயது மூதாட்டி, கரூர் சுங்ககேட்டை சேர்ந்த 27 வயது வாலிபர், தோகைமலையை சேர்ந்த 28 வயது பெண்.
வேலாயுதம்பாளையம்
ஈசநத்தத்தை சேர்ந்த 61 வயது முதியவர், வேலாயுதம் பாளையத்தை சேர்ந்த 55 வயது ஆண், 38 வயது ஆண், 50 வயது ஆண், 12 வயது சிறுமி, 15 வயது சிறுவன், காகிதபுரத்தை சேர்ந்த 34 வயது வாலிபர், பெரியார்நகரை சேர்ந்த 77 வயது மூதாட்டி, கடவூரை சேர்ந்த 26 வயது வாலிபர், 50 வயது பெண், அரசு காலனியை சேர்ந்த 24 வயது வாலிபர்.
 புலியூரை சேர்ந்த 43 வயது ஆண், செல்லாண்டிபட்டியை சேர்ந்த 43 வயது பெண், ஆண்டாங்கோவிலை சேர்ந்த 33 வயது வாலிபர் உள்பட 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story