கொரோனா பாதித்த பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம்


கொரோனா பாதித்த பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம்
x
தினத்தந்தி 22 April 2021 11:36 PM IST (Updated: 22 April 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதித்த பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்தது.

கரூர்
கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதி என பதாகை வைத்து அடைத்து வருகின்றனர். அப்பகுதிகளில் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. அந்தவகையில் வையாபுரி நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பகுதிகளில் கொரோனா பாதிப்பு பகுதி என பதாகை வைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நகராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் சிறப்பு காய்ச்சல் முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான காய்ச்சல், சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

Next Story