மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கரூர்
ஈரோடு மாவட்டம், பெரிய சேமூர் கனி ராவுத்தர் குலத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 45). இவர் கரூர் அருகே உள்ள சின்ன வடுகபட்டியில் கடந்த 3 மாதங்களாக தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மகேஸ்வரன் தூங்குவதற்காக மொட்டைமாடிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது 2-வது மாடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கதவு போடாத ஜன்னல் வழியே தவறி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மகேஸ்வரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக ெதரிவித்தனர்.
இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story