கொரோனா பாதித்தவர்கள் உள்ள தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு


கொரோனா பாதித்தவர்கள் உள்ள தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
x
தினத்தந்தி 23 April 2021 1:47 AM IST (Updated: 23 April 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதித்தவர்கள் உள்ள தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டது.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள வாண்டராயன்கட்டளை கிராமத்தில் கடந்த 2 நாட்களில் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சுகாதாரத்துறையினரால் உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து அந்த கிராமத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று நடைபெற்றது. மேலும் கொரோனா தொற்று பாதித்தவர்கள் உள்ள தெருவை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்பு கட்டைகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது. இந்த பணிகளில் ஏலாக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் ஆரம்ப சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

Next Story