எள் பயிரிட ஆர்வம் காட்டும் விவசாயிகள்
வேப்பந்தட்டை பகுதியில் எள் பயிரிட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
வேப்பந்தட்டை:
கிணறுகளில் தண்ணீர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருவமழை பரவலாக பெய்ததால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாய கிணறுகளில் தற்போது கோடை காலத்திலும் அதிக அளவில் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் விவசாயிகள் இந்த ஆண்டு எள், கடலை, உளுந்து, வெங்காயம் போன்ற பயிர்களை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர்.
குறிப்பாக எள் பயிரிட்டுள்ள விவசாயிகள் எள் பயிரில் பூ பூத்து அதிக அளவில் காய் பிடிப்பதற்கும், பூச்சிகள் எள் காயை சேதப்படுத்தாமல் இருப்பதற்காகவும் பூச்சி மருந்து தெளித்து வருகின்றனர்.
ஆர்வம்
பொதுவாக கோடை காலத்தில் கிணற்றில் தண்ணீர் குறைவாக இருக்கும் என்பதால், விவசாயிகள் குறைந்த அளவே எள் சாகுபடி செய்து வந்தனர். ஆனால் தற்போது கிணறுகளில் அதிக தண்ணீர் இருப்பதால், கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் விவசாயிகள் எள் பயிரிட அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story