ஸ்ரீரங்கம் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.47.62 லட்சம் காணிக்கை வசூல்


ஸ்ரீரங்கம் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.47.62 லட்சம் காணிக்கை வசூல்
x
தினத்தந்தி 23 April 2021 2:47 AM IST (Updated: 23 April 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.47.62 லட்சம் காணிக்கை வசூல் ஆனது.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதம் தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் எண்ணுவது வழக்கம். அதன்படி, நேற்று கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி கருட மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் காணிக்கையாக ரூ.47 லட்சத்து 62 ஆயிரத்து 487,  தங்கம்  81 கிராம்,  வெள்ளி 935 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம் கிடைத்தது.

Next Story