பணியின்போது இறந்த போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு நிதி உதவி


பணியின்போது இறந்த போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு நிதி உதவி
x
தினத்தந்தி 23 April 2021 2:56 AM IST (Updated: 23 April 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

பணியின்போது இறந்த போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு நிதி உதவியை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் வழங்கினார்.

நெல்லை:
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் சாமுவேல் பாண்டியராஜன். இவர் கடந்த 9.3.2020 அன்று பணியின்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. 

இதற்கான காசோலையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு மணிவண்ணன், ஏட்டு சாமுவேல் பாண்டியராஜனின் மனைவி தங்கமலர்மதியிடம் வழங்கினார். தங்கமலர்மதி, நெல்லை மாவட்ட போலீஸ் சி.சி.டி.என்.எஸ். பிரிவில் ஏட்டாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story