ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறிய 200 பேருக்கு அபராதம்


ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறிய 200 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 23 April 2021 3:11 AM IST (Updated: 23 April 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறிய 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நெல்லை:
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நெல்லையில் இரவு நேரத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித் திரிந்தவர்களுக்கு போலீசார் தலா ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். இவ்வாறு நேற்று 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே கொரோனா அதிகமாக பரவி வருவதால் முழுமையான ஊரடங்கு விதிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி வடமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 200 பேர் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரியில் இருந்து டெல்லி நிஜாமுதீன் வரை செல்லும் சிறப்பு ெரயிலில் புறப்பட்டு சென்றனர்.

Next Story