திருவேங்கடம் அருகே விபத்தில் இறந்த போலீஸ்காரர் உடல் தகனம்
திருவேங்கடம் அருகே விபத்தில் இறந்த போலீஸ்காரர் உடல் தகனம் செய்யப்பட்டது.
திருவேங்கடம், ஏப்.23-
தென்காசி மாவட்டம் கீழத்திருவேங்கடம் தெற்கு பாரப்பட்டியை சேர்ந்த சின்னசாமி - சரஸ்வதி தம்பதியின் மகன் சிவகுமார் (வயது 32). இவர் தமிழ்நாடு ஆயுதப்படை போலீசில் விருதுநகரில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஜெயா. அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தலைப்பிரசவத்தின் போது இறந்து விட்டார். இதையடுத்து சிவகுமார் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விருதுநகரில் நடந்த ஒரு விபத்தில் சிவகுமார் பலத்த காயம் அடைந்தார். அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து தென்காசி மாவட்ட ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் அஞ்சூர் தலைமையில் ஆயுதப்படை போலீசார், சிவகுமார் உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் 24 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story