கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர் சாவு


கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர் சாவு
x
தினத்தந்தி 23 April 2021 8:23 AM IST (Updated: 23 April 2021 8:23 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று உறுதியானதால் தண்டையார்பேட்டை காலரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பெரம்பூர், 

சென்னை கொடுங்கையூர், மீனாம்பாள் நகரைச் சேர்ந்தவர் மதனகோபால் (வயது 58). இவர், சென்னை பாரிமுனையில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தண்டையார்பேட்டை காலரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்வதாக டாக்டர்களிடம் கூறிவிட்டு வீட்டில் வந்து தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிகிறது. நேற்று திடீரென மதனகோபால் இறந்து விட்டார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story