பற்றாக்குறையை அனுமதித்து கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் அதிக லாபம் தயாநிதி மாறன் எம்.பி. குற்றச்சாட்டு


பற்றாக்குறையை அனுமதித்து கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் அதிக லாபம் தயாநிதி மாறன் எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 April 2021 9:35 AM IST (Updated: 23 April 2021 9:35 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் எம்.பி. நேற்று வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது.

சென்னை, 

இதுதான் நரேந்திர மோடியின் புதிய இந்தியா. நரேந்திர மோடியின் தடுப்பூசி தயாரிக்கும் நண்பர்கள் அரசு லாப நோக்கத்துடன் மட்டுமே தடுப்பூசி வினியோகம் செய்வதில்லை என்று கூறுகிறார்கள். தடுப்பூசி வினியோகத்தில் பற்றாக்குறை அனுமதிக்கப்படுவதால், மக்கள் அங்கும், இங்குமாக அலைகிறார்கள். ஏற்கனவே பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும் என்றும் கூறுகிறார்கள். அதே வேளை மோடியின் தடுப்பூசி தயாரிக்கும் நண்பர்கள் தடுப்பூசிகளின் விலையை 200 முதல் 300 சதவீதம் உயர்த்தி, நல்ல லாபத்தை பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்தியர்களுக்கு தடுப்பூசிகள் இயல்பாகவே கிடைக்கிறது என்று உறுதியும் அளித்திருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க.வினரோ ‘ஆஹா... தடுப்பூசி பற்றாக்குறையை மோடி எப்படி தீர்த்து வைத்தார் பார்த்தீர்களா?’, என்று பேசுகிறார்கள்.

Next Story