துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்


துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 23 April 2021 6:14 PM IST (Updated: 23 April 2021 6:14 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் குவிந்து கிடக்கும் குப்பையால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தாராபுரம்
தாராபுரம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் குவிந்து கிடக்கும் குப்பையால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாராபுரம் நகராட்சி
தாராபுரம் நகரப்பகுதியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தினசரி சுகாதார ஊழியர்கள் தெருவுக்கு சென்று குப்பைகளை வாங்கி வண்டியில் கொண்டு செல்வது வழக்கம். இதனால் தெருக்களில் குப்பைகள் சேராமல் சுகாதார முறையில் இருந்து வந்தது.
 இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக சுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கடை வீதி, அலங்கியம் சாலை, உடுமலை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுகாதார ஊழியர்கள் குப்பைகளை சேகரிக்க வருவதில்லை. அந்தந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை தெருவுக்குள் செல்லும் சாலையின் முன்பு குவித்து வருகின்றனர். அப்பகுதியில் இரவு நேரங்களில் நாய்கள்  குப்பைகளை கிளறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. 
குவிந்து கிடக்கும் குப்பை
இந்த நிலையில் தாராபுரம்அலங்கியம் ரோட்டில் உள்ள அம்பேத்கர் நகருக்கு செல்லும் வழியில் ரோட்டு ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலா் குப்பைகளை தங்கள் வாகனங்களில் கொண்டு வந்து ரோட்டு ஓரத்தில் வீசிவிட்டு செல்கின்றனா். அதுபோன்று தாராபுரம் குடியிருப்பு பகுதி மக்கள் வேறு வழியின்றி குப்பைகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு. குப்பைகள் குவிந்து கிடக்கிறது. 
மேலும் அந்த குப்பைகளுக்கு சிலா் தீவைத்து விடுகின்றனா். இதனால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதோடு, சுவாசக்கோளாறும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுத்து அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு உடனடியாக துப்புறவு பணியாளர்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்



Next Story