12 பேருக்கு கொரோனா
12 பேருக்கு கொரோனா
வெள்ளகோவில்
வெள்ளகோவில் பகுதியில் தற்போது தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 ஆண், 2 பெண்கள் மற்றும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட 35 வயது ஆணுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. மொத்தம் 10 ஆண், 2 பெண்களுக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது., இதனால் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சேர்ந்து கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள எம்.பழனிசாமி நகர், குட்டைகாடு, முத்துக்குமார் நகர் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story