ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்


ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 23 April 2021 7:19 PM IST (Updated: 23 April 2021 7:19 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி இல்லை என கூறியதால் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்
கொரோனா தடுப்பூசி இல்லை என கூறியதால்  ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தடுப்பூசி வருகை
திருப்பூர் மாவடடத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்தது.
இதனால் கடந்த சில நாட்களாக தடுப்பூசி பல இடங்களில் போடப்படவில்லை. பொதுமக்களும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று ஏமாற்றுத்துடன் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். இந்த நிலையில் தற்போது மாவட்டத்திற்கு கூடுதலாக 13 ஆயிரத்து 920 டோஸ் கொரோனா தடுப்பூசி வந்தது.
 வாக்குவாதம்
இதன் காரணமாக நேற்று தடுப்பூசி போட பலரும் ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குவிந்தனர். திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள டி.எஸ்.கே. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பலரும் காலையில் இருந்தே நீண்ட நேரம் வரிசையில் நின்றனர். தொடர்ந்து ஊழியர்கள், பொதுமக்களிடம் தடுப்பூசி இல்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து 60 பேருக்கு மட்டும் 2ம் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், வந்தவுடன் மற்றவர்களுக்கு செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-

Next Story