பீட்ரூட் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
உடுமலை பகுதியில் பீட்ரூட் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தளி
உடுமலை பகுதியில் பீட்ரூட் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
விவசாயம்
உடுமலை சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் அமராவதி, திருமூர்த்தி அணைகள் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை ஆதாரமாக கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் தென்னை வாழை கரும்பு நெல் சப்போட்டா மா போன்ற பயிர்களும் கத்தரி வெண்டை, அவரை தக்காளி பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும் கீரை வகைகளும் மானாவாரியாக கம்பு சோளம் உளுந்து எள் போன்ற தானியங்களும் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு பருவமழையும் தீவிரமாக பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டதுடன் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வந்தது. அதைத்தொடர்ந்து திருமூர்த்தி மற்றும் அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமராவதி அணை பாசனத்தில் தற்போது 2-ம் போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமூர்த்தி அணையின் 3ம் மண்டல பாசனத்தில் தக்காளி, பீட்ரூட் அவரை போன்ற காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாகுபடி
அந்த வகையில் உடுமலை தளி பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் பீட்ரூட் சாகுபடி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் பீட்ரூட் செடிகளை தீவிரமாக பராமரித்து வந்தனர். தண்ணீர் பற்றாக்குறை இல்லாததால் பீட்ரூட் செடிகளும் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. இரண்டு மாத பராமரிப்புக்கு பின்பு பீட்ரூட் அறுவடையை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story