கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 10 பேர் பலி


கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 10 பேர் பலி
x
தினத்தந்தி 23 April 2021 7:40 PM IST (Updated: 23 April 2021 7:40 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 10 பேர் பலியாகி உள்ளனர். மூச்சுத்திணறலால் மேலும் 4 பேர் இறந்துள்ளனர்.

அடுக்கம்பாறை

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 10 பேர் பலியாகி உள்ளனர். மூச்சுத்திணறலால் மேலும் 4 பேர் இறந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது 171 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 அவர்கள் 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சிலர் உயிரிழந்து விடுகின்றனர். 

அதன்படி கடந்த 21-ந் தேதி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 6 பேர் இறந்தனர். நேற்று  இரவு 4 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 10 பேர் பலியாகி உள்ளனர். 

இதேபோல அந்த மருத்துவமனையில் தொற்று அறிகுறி இல்லாமல் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டில் 21-ந் தேதி 4 பேர் மூச்சுத்திணலால் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் கொரோனாவுக்கு தான் இறந்தார்கள் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அதிகார பூர்வ தகவல் தெரிவிக்கவில்லை. நிர்வாகம் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. 

மருத்துவமனையில் இறப்பவர்கள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தினமும் தகவல் வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காரணம் என்ன?

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘‘வேலூரில் சிகிச்சை பெற்ற வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பலியாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலியானதாக தகவல் எதுவும் வரவில்லை. 

மேலும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா இறப்பு குறித்து தகவல் வரவில்லை. ஆனால் அவர்கள் பிற நோய்களில் கூட இறந்திருக்கலாம்’’ என்றனர்.
=========

Next Story