மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவனும் இறந்த சோகம்


மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவனும் இறந்த சோகம்
x
தினத்தந்தி 23 April 2021 8:21 PM IST (Updated: 23 April 2021 8:21 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவனும் இறந்தார்.

குடியாத்தம்

குடியாத்தத்தில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவனும் இறந்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை விநாயகபுரம் மகாவீர் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 62). தனியார் நூற்பாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி இசைவாணி என்கிற வான்மதி (58). இவர்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது.

லாவண்யா என்ற மகள் உள்ளார். அவர் திருமணமாகி கணவருடன் கோவையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத பாலசுப்பிரமணியன் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இதே நேரத்தில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென மனைவி வான்மதிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே வான்மதி இறந்து விட்டார்.
தகவல் அறிந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் திரண்டு உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். 

உடல்நிலை சரியில்லாத நிலையிலும் மனைவி இறந்த துக்கத்திலும் வீட்டில் சோகத்தில் பாலசுப்ரமணியன் இருந்துள்ளார். உறவினர்கள் வான்மதியின் உடலை நேற்று மாலை விநாயகபுரம் சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்த நிலையில் திடீரென மாலை 6 மணி அளவில் சோகத்தில் வீட்டில் அமர்ந்து இருந்த பாலசுப்பிரமணியன் அப்படியே மயங்கி விட்டார். 

உடனே வீட்டில் இருந்த மகள் லாவண்யா உள்ளிட்ட உறவினர்கள் பார்த்தபோது பாலசுப்பிரமணியனும் இறந்து விட்டது தெரியவந்தது.
இணைபிரியாமல் வாழ்ந்த இவர்கள் சாவிலும் ஒன்றாக இணைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story