வேடசந்தூர் அருகே உரம் விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


வேடசந்தூர் அருகே உரம் விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 April 2021 8:32 PM IST (Updated: 23 April 2021 8:32 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே உரம் விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள புதுரோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு உரம் விலை உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சவடமுத்து, பொருளாளர் பிச்சைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில், மாவட்ட செயலாளர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் முனியப்பன், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் சங்கர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, உரம் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி கோஷமிட்டனர். 

Next Story